Free Shipping for order above Rs.1500
மனிதருக்கான இனிப்புச் சுவையை தேன், நாட்டுச்சர்க்கரை, வெல்லம், வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவை தருகின்றன. பளீர் வெண்மை நிறத்தில் இருப்பதால், கடந்த 40 ஆண்டுகளாக கோலோச்சுகிறது வெள்ளை சர்க்கரை. ஆனால், இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளை சர்க்கரை, பல நோய்கள் உருவாவதற்கும் மூல காரணமாய் திகழ்கிறது. நமது உடல் தனக்குத் தேவைப்படும் சர்க்கரையை, உணவுப் பொருட்களான தினை, அரிசி, கிழங்கு, கீரை ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நாட்டுச்சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களைப் புறக்கணித்து, உடலுக்கு தீமை தரக்கூடிய, ரசாயனத் தன்மை கொண்ட வெள்ளை சர்க்கரையையே இன்று அதிகம் பயன்படுத்துகிறோம்.
கரும்பு பாலில் தயாரிக்கப்படும் வெல்லம், இந்தியாவில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக உட்கொள்ளப்படும் உணவுப் பண்டமாகும்.
ஆயுர்வேத மருத்துவ நூலில் கரும்பு பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்துக்கு, வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதாகவும், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் புழுதி மற்றும் புகையால் ஏற்படும் பாதிப்பைக் குணமாக்கும் தன்மை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறில் உள்ள கனிம சத்துகள் கரையக்கூடிய வகையைச் சார்ந்தவை என்பதால், உடலில் எளிதில் ஜீரணமாகிறது. கரும்புச் சாறில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும், கனிமங்களையும் ஒத்திருக்கின்றன. இது உடலில் அமிலத் தன்மையை வெளியேற்றி, ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை உருவாக்குகிறது.
கரும்புச் சாறு குறிப்பிட்ட கொதிநிலையில், அதன் சத்துகளில் மாற்றம் ஏற்பட்டு பாகாக மாறும்போது, உலர வைக்கப்பட்டு பழுப்பு நிறத்தில் கிடைக்கும் பொருளே நாட்டுச்சர்க்கரையாகும். இது உடலில்தேங்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது.
நோய்களின் வில்லன்
100 கிராம் வெள்ளைச் சர்க்கரையில், 398 கலோரிகள் இருக்கின்றன. அதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் மிகவும் குறைவு. வெள்ளைச் சர்க்கரை என்பது ரசாயனங்களின் மூலம் ப்ளீச் செய்யப்படுவது. அப்படி நம் உபயோகத்துக்கு வரும் வெள்ளைச் சர்க்கரையில், அந்த ப்ளீச்சின் மிச்சங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
வெள்ளைச் சர்க்கரையில் சல்ஃபர் அளவும் அதிகம். அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதால் வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைத் தவிர்ப்பதே நல்லது. வெள்ளைச் சர்க்கரையோடு ஒப்பிடும்போது நாட்டுச் சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் அதிகம்.
மாதவிடாய் கால வலி
பெண்களின் மிக கொடுமையான நாட்களாக கருதப்படுவது இந்த மாதவிடாய் நாட்களில் வலியை போக்கும் மருந்தாக நாட்டு சர்க்கரை செயல்படும். மேலும், கர்ப்பப்பையின் தசைகளை இவை தளர்த்தி மாதவிடாய் வலியை குறைத்து விடும்.
உடல் எடை குறைய
நாட்டுச் சர்க்கரையில் மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கிறது. எனவே, வெள்ளை சர்க்கரைக்கு பதில் இவற்றை பயன்படுத்தினால் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும் குறையும். உடல் எடையும் குறைய அதிகம் உதவும்.
ஆஸ்துமா பிரச்சினைக்கு
மூச்சு திணறல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். இதற்கு ஒரு அருமையான தீர்வாக இந்த நாட்டு சர்க்கரை இருக்கிறது. இவற்றை பயன்படுத்தி வந்தால் ஆஸ்துமா பிரச்சினை குணமடையும். மேலும், உடலுக்கு அதிக வலிமையையும் கிடைக்கும்.
அஜீரண கோளாறு
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்சினையால் இன்று பலர் கஷ்டப்படுகின்றனர். நாட்டு சர்க்கரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த ஜீரண கோளாறுகள் விரைவிலே குணமாகும். அஜீரண கோளாறுகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே நீரில் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிது இஞ்சியை சேர்த்து கொதிக்க விட்டு குடியுங்கள். நம்முடைய முன்னோர்கள் நிறைய சாப்பிட்டாலோ அசைவ உணவு சாப்பிட்டாலோ சாப்பிட்டு முடித்ததும் சிறிது நாட்டுச் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். அதன் காரணம் இப்போது புரிகிறதா? ஆனால் நாமோ சாப்பிட்டதும் இனிப்பு சாப்பிடுவது நல்லது என்று வெள்ளைச் சர்க்கரையில் செய்து இனிப்பை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
சோர்வை நீக்கும்
உடல் சோர்வுக்கு முக்கியக் காரணமே ஊட்டச்சத்து குறைபாடு தான். அத்தகைய பிரச்சினை இருக்கிறவர்கள் வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும். இது உடல் செல்களை புத்துணர்வூட்டி சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.
சளியை வெளியேற்றும்
சிறிது ஓமத்துடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் கோழை சளி வெளியேறும்.
சரும அழகு மேம்பட
நாட்டுச் சக்கரையில் வைட்டமின் பி அதிகம் இருப்பதால் முக அழகிற்குப் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக சருமத்தின் வறட்சியைப் போக்கி ஈரப்பதத்தை அதிகரிக்கச செய்கிறது. சருமத்தைப் பொலிவுடன் இளமையாக வைத்திருக்க உதவும். சிறிது வாழைப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து முகத்தில் தேய்க்கச் செய்ய சருமம் பொலிவாகும். சரும செல்கள் சிதைவடைவதில் இருந்து காக்கும்.
வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற கதையைப் போல தான் இந்த வெள்ளைச் சர்க்கரை. இதில் எந்த விதமான தயக்கமும் வேண்டாம் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்! நம் விவசாயத்தை மேம்படுத்த முடியும்! அதன் மூலம் வளமான இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்!
© 2023 All Rights Reserved. Jyothis Pure.
Designed and Developed by Greaterdhan
Leave a Reply